கிறிஸ்தவ பக்திமுயற்சி

நமது தேவிகோடு திருச்சபையின் பக்திமுயற்சி சங்கமானது 104 மாணவர்களும் 14 ஆசிரியர்களால் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் மதியம் சரியாக 2 மணியளவில் துவங்கி நடைபெறுகிறது.நமது பிள்ளைகளை பக்திவிருத்தியடைய செய்வதே பக்திமுயற்சி சங்கத்தின் முக்கிய நோக்கம்.நமது பிள்ளைகளுக்கு பக்தி வாழ்வை பற்றி கூறுவதோடு நிறுத்தி விடாமல் பொதுச் சேவை செய்வது,ஏழைகளுக்கு உதவுவது போன்ற காரியங்களும் பயிற்றுவிக்கப்படும். பொது சேவை செய்யும் விதமாக ஆலய வளாகத்தை சுத்தம் செய்தல், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுதல் போன்ற நற்செயல்கள் செய்கிறார்கள்.அவர்களின் தனித்திறமையை வளர்க்கும் விதமாக பல போட்டிகள் நடத்தப்படுகிறது.ஆண்டுக்கு ஓருமுறை றாலி போட்டி நடத்தி அதில் பல பரிசுகளை பெற்று நமது சபைக்கு பெருமை சேர்க்கிறார்கள்.ஆண்டு இறுதியில் ஆண்டு விழா நடத்தப்பட்டு நமது பிள்ளைகளின் பல்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் பிள்ளைகளின் திறமைக்கு தக்க பரிசுகள் வழங்கப்பட்டு அந்த ஆண்டிற்கான பக்திமுயற்சி சங்கம் நிறைவு செய்யப்படுகிறது.