
நமது சபையின் வாலிபர் ஐக்கிய சங்கமானது அனைத்து ஞாயிற்று கிழமையயும் ஆலய ஆராதனைக்குப் பின் சரியாக 11.30 மணியளவில் சுமார் 60 வாலிபர்களுடன் ஆலயத்தில் வைத்து மிகவும் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது. ஆரம்ப ஜெபத்துடன் தொடங்கப்பட்டு பாடல்ள் மூலம் இறைவனை ஆராதிக்கப்படுகின்றது. பின்னர் ஆலோசகருடன் இணைந்து பல ஆலோசனைகள் நடத்தப்படுகின்றது. அந்த ஆலோசனையானது திருச்சபையின் வளர்சிக்காகவும், ஏழை எளியோரின் நலத்திட்டங்களாகிய ஏழைகளின் வீடு கட்டும் பணி, ஏழைகளின் கல்வி உதவி, நோயினால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவி போன்ற சமூக பணியும், ஆலைய சீர்திருத்த பணி, ஆலய அலங்கார பணியை பற்றிய ஆலோசனை நடத்தப்பட்டு அனைத்தையும் சிறப்பாக செயல்படுத்தப் படுகின்றது. அதுமட்டுமின்றி ஆலயத்தில் நடைபெறுகின்ற அனைத்து நிகழ்சிகளிலும் வாலிபர்கள் முன்னின்று சிறப்பித்து திருச்சபையின் தூண்களாக சிறந்து விளங்குகின்றனர். வாலிபர்கள் கிராமத்து ஊழியங்கள் மற்றும் மாதத்திற்கு ஒருமுறை சபை அங்கத்தினர் ஒருவர் இல்லத்தில் ஜெபக்கூட்டம் நடத்தப்படுகின்றது. அந்த ஜெபக்கூட்டத்தில் அந்த ஊர் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் இறயாசிப்பெற்று செல்கின்றனர்.